Home நாடு சீ பீல்ட்: தீயணைப்பு வீரரைத் தாக்கியதாக நம்பப்படும் நால்வர் தடுத்து வைப்பு

சீ பீல்ட்: தீயணைப்பு வீரரைத் தாக்கியதாக நம்பப்படும் நால்வர் தடுத்து வைப்பு

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமது காசிமை, தாக்கியதாக நம்பப்படும் நால்வரை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இத்தாக்குதலின் போது முகமது அடிப்புக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜேஎன்) சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதற்கிடையே, காவல் துறையினர் மேலும் 38 பேர்களை இக்கலவரம் குறித்து விசாரிக்க தேடிவருவது குறிப்பிடத்தக்கது.