Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம் : 37 பேர் இன்னும் தங்களது சொத்துகளை அறிவிக்கவில்லை

ஊழல் தடுப்பு ஆணையம் : 37 பேர் இன்னும் தங்களது சொத்துகளை அறிவிக்கவில்லை

1051
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 37 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இன்னமும் தங்களின் சொத்து மதிப்புகள் குறித்து அறிவிக்கவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது. .

முக்கிய பதவியிலிருக்கும், கூட்டரசு பிரதேச துணையமைச்சர் ஷாருடின் முகமட் சாலேவும் இதில் அடங்குவார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் ஷாம்சுடின் பஹாரின் முகமட் ஜாமில் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கூறுகையில், மீதமுள்ள 13 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் மற்ற 24 பேர்கள் அரசியல் செயலாளர்கள் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அரசியல் தலைவர்களிடமிருந்து சொத்துப் பிரகடனங்களை பெற்றுக் கொள்வது எங்களது கடமை அல்ல. மாறாக அவர்கள் மக்களுக்கு செய்து கொடுத்த வாக்குறுதி இது” என ஷாம்சுடின் கூறினார்.

வெளிப்படையான தன்மை மற்றும் நல்லாட்சியை நம்பிக்கைக் கூட்டணி நடத்தி வருவதற்குச் சான்றாக ஊழல் தடுப்பு ஆணையம் தங்களது வலைத்தளத்தில் இவ்விவரங்களை வெளியிட்டு வருகிறது.

சமீபத்திய சொத்து விவரங்களை வெளியிட்டதில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் தலைவர்களில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் 77.011 மில்லியன் சொத்துகளுடன் பட்டியலில் முதலிடத்திலுள்ளது தெரிய வந்தது.