Home நாடு சாஹிட் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

சாஹிட் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

895
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி மீது மேலும் ஒரு பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இருப்பினும், அம்னோ கட்சியின் தலைவருமான அவர், அவ்வனைத்துக் குற்றச்சாட்டுகளையும், நீதிபதி ரோசினா அயோப் முன்னிலையில் மறுத்தார்.

#TamilSchoolmychoice

அகால்பூடி அறவாரியம் சம்பந்தப்பட்ட 19-வது குற்றச்சாட்டாக அக்கூடுதல் குற்றச்சாட்டு அமைகிறது. அந்த அறவாரியத்திற்குச் சொந்தமான 10 மில்லியன் ரிங்கிட் பணத்தை நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம் 409-ன் பிரிவின் கீழ், 2 வருடங்களுக்கு குறையாத, 20 வருடங்களுக்கு மேல் போகாத சிறைவாசமும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அக்டோபர் 19-ம் தேதி, தம் மீது சுமத்தப்பட்ட இலட்சக் கணக்கான மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 45 ஊழல் மற்றும் பண மோசடி குற்றச் சாட்டுகளை சாஹிட் மறுத்த வேளையில், 46-வது குற்றச்சாட்டாக அகால்பூடி சம்பந்தமான பண மோசடி குற்றச்சாட்டு அமைகிறது.