Home இந்தியா ராஜஸ்தான் : அசோக் கெஹ்லோட் முதல்வர் – சச்சின் பைலட் துணை முதல்வர்

ராஜஸ்தான் : அசோக் கெஹ்லோட் முதல்வர் – சச்சின் பைலட் துணை முதல்வர்

1000
0
SHARE
Ad
அசோக் கெஹ்லோட் – ராகுல் காந்தி – சச்சின் பைலட்

புதுடில்லி – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருப்பதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் கெஹ்லோட் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக இருந்த அனுபவம் வாய்ந்தவர் கெஹ்லோட்.

அவருக்குத் துணையாக காங்கிரசின் இளைய முகமான சச்சின் பைலட் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். ஒரு காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த அமரர் ராஜேஷ் பைலட்டின் மகனான சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலத்தைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றுவதற்கு சிறந்த முறையில் வியூகம் வகுத்துப் பாடுபட்டவராவார்.

கெஹ்லோட் – சச்சின் இருவருக்கும் இடையில் யார் முதல்வர் என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு சமாதான உடன்பாடாக, கெஹ்லோட்டை முதலமைச்சராகவும் சச்சினை துணை முதல்வராகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களைக் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றியிருக்கிறது. 199 இடங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில் தனிப் பெரும்பான்மை பெற 100 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு 73 இடங்களே கிடைத்தன.

மற்ற கட்சிகளுக்கு 20 இடங்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளும் ஆதரவு தந்துள்ளன.