Home கலை உலகம் கெண்டல் ஜென்னர்: அதிக எண்ணிக்கையிலான இரசிகர்களை கொண்ட நட்சத்திரம்!

கெண்டல் ஜென்னர்: அதிக எண்ணிக்கையிலான இரசிகர்களை கொண்ட நட்சத்திரம்!

904
0
SHARE
Ad

அமெரிக்கா: கடந்த ஆண்டைப் போலவே, ரியாலிட்டி டி.வி ஸ்டார் மற்றும் மாடல் அழகி கெண்டல் ஜென்னர் சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த விவரங்கள் Models.com எனும் அகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.  

மாடலிங் உலகில், இந்த ஆண்டிற்கான சமூக ஊடகங்களின் இராணி என கெண்டல் ஜென்னர் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஒரு வருடக் காலப்பகுதியில் சுமார் 17 மில்லியன் பேருக்கு மேல் அவரை சமூக ஊடகங்களில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தொடர்ந்து  இரு வருடங்களுக்கு உலகில் அதிகம் வருமானம் பெற்ற மாடல் அழகியாகவும், கெண்டல் ஜென்னர் குறிப்பிடப்பட்டுள்ளார். போர்ப்ஸ் இணையத்தளம் இது குறித்து வெளியிட்டப் பதிவில், தற்போது 22.5 மில்லியன் டாலர் வருமானத்தோடு கெண்டல் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice