கோலாலம்பூர் – அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து அகமட் சாஹிட் ஹமிடி, விடுமுறையில் செல்வதைத் தொடர்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் பொறுப்பேற்கிறார்.
இதன் காரணமாக, கட்சியின் துணைத் தலைவர் பொறுப்புகளை இனி கட்சியின் மூத்த உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏற்று செயல்படுவார் என அம்னோ தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அம்னோ நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனுவார் மூசா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.
இந்த சுமுகமான பதவி மாற்றங்களைத் தொடர்ந்து இனி அம்னோ தொடர்ந்து தனது உருமாற்ற நடவடிக்கைகளிலும், கட்சியின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடும் என்றும் அனுவார் மூசா மேலும் கூறினார்.