Home கலை உலகம் விஷால் விடுவிக்கப்பட்டார்

விஷால் விடுவிக்கப்பட்டார்

1069
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.25 நிலவரம்) தமிழ்த் திரைப்படச் சங்கத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடப்பு சங்கத் தலைவர் விஷாலுக்கும் அவரது எதிர்த் தரப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து நேற்று ஒரு தரப்பினரால் பூட்டப்பட்ட, தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டைத் திறக்க முற்பட்ட விஷால் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தி.நகரிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விஷால் இந்திய நேரம் மாலை 7.00 மணியளவில் காவல் துறையினரால் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையான விஷால் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது தன்மீது பிரிவு 145-இன் கீழ் பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததற்காக தன்மீது காவல் துறையினர் குற்றம் சுமத்தியிருப்பதாகவும், இதனை எதிர்த்து சட்டரீதியானப் போராட்டத்தைத் தான் தொடரப் போவதாகவும் சூளுரைத்தார்.

#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு