Home நாடு பள்ளி சிற்றுண்டிச் சாலைகளில் உணவுத் தயாரிப்புகள் கண்காணிக்கப்படும்!

பள்ளி சிற்றுண்டிச் சாலைகளில் உணவுத் தயாரிப்புகள் கண்காணிக்கப்படும்!

1696
0
SHARE
Ad

தங்காக்: பள்ளியின் முதல் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை), கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லீ மாலிக் ஜோகூரில் உள்ள ஜாலான் சியாலாங் தமிழ்ப் பள்ளிக்கு வருகைப் புரிந்தார்.

முதலாம் ஆண்டு முதல், ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் தங்களது பள்ளி வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் இந்த வேளையில், பள்ளிகளும், ஆசிரியர்களும், உயர் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, பள்ளிகளில், பாட வகுப்புகள் சிறப்பான முறையில் அமைவது போல, பள்ளி சிற்றுண்டிச் சாலைகளிலும் தரமான உணவுகள் தயார் செய்துத் தரப்பட வேண்டிய முக்கியத்துவத்தை அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருந்தார். மாணவர்கள் பள்ளிகளில் இருக்கும் வரை அவர்களுக்கு, தரமான, சத்துள்ள உணவுகள் தயார் செய்துத் தரப்பட வேண்டும் எனவும், இந்நிலை, வகுப்புகளில் மாணவர்கள் தளர்ந்து விடாமல் இருப்பதற்கும் வித்திடும் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து, கல்வி அமைச்சு தீவிரமாக கண்காணித்து வரும் எனவும், பள்ளிகளில் தயாரிக்கப்படும் உணவுகள் அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று, பள்ளிக்கு வருகைப் புரிந்த அமைச்சருக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் கே.தனகோடி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் உற்சாக வரவேற்பை வழங்கினர்.