Home நாடு சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!

சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!

896
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள், 26 வயதிலிருந்து 46 வயது நிரம்பிய,இருஆண்கள் மற்றும்,ஒரு பெண் என்றும் அவர் கூறினார்.

சுல்தான் முகமட்டை அவமதிக்கும்படியாக கருத்துகளை வெளியிட்ட அம்மூவருக்கு எதிராக அதிகமான புகார்கள் காவல் நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்டதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக புசி கூறினார்.

#TamilSchoolmychoice

@azhamaktar மற்றும் @aliaastaman என்ற டுவிட்டர் கணக்கிலிருந்தும், எரிக் லியூ என்ற முகநூல் பக்கத்திலிருந்தும் இக்கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இம்மூன்று தனிநபர்களும் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவர் என புசி கூறினார்.