Home நாடு மலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

மலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

812
0
SHARE
Ad

ஷா அலாம்: மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகள் குறித்த விவகாரங்களில் இதர இனத்தவர்கள் புரிந்து நடந்து கொள்ளுமாறு பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

நேற்று இரவு நடந்த பிகேஆர் கட்சி விருந்து நிகழ்ச்சி ஒன்றில், அத்தகைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கும் வேளையில், இதர இனத்தவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், தங்களது உரிமைகள் மற்றும் நிலைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கருதும், மலாய்க்காரர்களின் நிலையை இதர சமூகங்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மலாய்க்காரர்கள் வறுமையில் இருப்பது போன்று, சில நகர்புறப் பகுதிகளில் சீன மற்றும் இந்தியக் குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கின்றன. இந்நாடு அனைத்து மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதால், அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.   

கட்சியின் ஆதாரவாளர்கள் குறித்து பேசுகையில்,நாம் மக்களுக்கு நல்லதைச் செய்யாமல், மக்கள் நமக்கு ஆதரவுத் தருவார்கள் என எதிர்பார்ப்பது சரியல்ல.  அதிருப்தி அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒழுங்குமுறை மற்றும் ஒற்றுமையாக இருக்க கட்சி உறுப்பினர்கள் பாடுபட வேண்டும்” என்று அன்வார் கேட்டு கொண்டார்.