Home உலகம் 432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு

432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு

1558
0
SHARE
Ad

இலண்டன் – கடந்த 18 மாதங்களாக நடத்தி வந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நேற்று சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய மசோதாவை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 220 வாக்குகள் பெரும்பான்மையில் நிராகரித்தது.

பிரெக்சிட் மசோதாவுக்கு ஆதரவாக 202 வாக்குகள் கிடைத்த நிலையில் அந்த மசோதாவை எதிர்த்து 432 வாக்குகள் விழுந்தன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் நிலையில் அடுத்து என்ன நேரும் என்ற குழப்பங்கள் பிரிட்டனில் நீடித்து வருகின்றன.

தெரெசா மேயின் மசோதா சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜெரெமி கோர்பின் முன்மொழிந்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அதன் காரணமாக தெரெசா மேயின் நடப்பு அரசாங்கம் கவிழலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.