Home உலகம் பிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

பிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

1192
0
SHARE
Ad

இலண்டன் – உலக நாடுகளின் கண்களும், அனைத்து ஊடகங்களின் கவனமும் இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் நோக்கியே திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. காரணம், பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்டமாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இலண்டன் நேரப்படி இரவு 7 மணிக்குப் பின்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வாக்கெடுப்பின் மூலம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பார்களா என்பது தெரிந்து விடும்.

பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே-க்கு (படம்) இது சவாலான ஒரு பணியாகும்.

#TamilSchoolmychoice

அடுத்து வரும் ஆண்டுகளில் பிரிட்டனின் 66 மில்லியன் மக்களைப் பாதிக்கப் போகும் முடிவை இன்று எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தெரசா மே சமர்ப்பித்திருக்கும் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால், எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதியோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

ஆனால், தெரசா மேயின் மசோதா நிராகரிக்கப்பட்டால் பிரிட்டன் மீண்டும் ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக் குறியோடு கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.