Home நாடு மின்னல் பண்பலையில் 50 மணி நேர தைப்பூச நேரடி நிலவரங்கள்

மின்னல் பண்பலையில் 50 மணி நேர தைப்பூச நேரடி நிலவரங்கள்

1249
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆண்டுதோறும் மலேசியாவின் முக்கிய ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா நிலவரங்களை வானொலி நேயர்களுக்கு வழங்கி வந்திருக்கும் மின்னல் பண்பலை (எப்.எம்) இந்த ஆண்டும் தனது சேவையைத் தொடர்கிறது.

நாளை திங்கட்கிழமை ஜனவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு மின்னல் வானொலி நாட்டின் முக்கிய முருகன் திருத்தலங்களில் இருந்து 50 மணி நேர நேரடி நிலவரங்களை  வழங்கவிருப்பதாகவும் மின்னல் வானொலியின் நிர்வாகி சுமதி கூறினார்.

பத்துமலைத் திருத்தலம், கெடா – சுங்கை பட்டாணி, பேராக் – ஈப்போ, ஜோகூர் பாரு, பினாங்கு – தண்ணீர் மலை ஆகிய இடங்களில் இருந்து மின்னல் அறிவிப்பாளர்கள் நேரடி நிலவரங்களை தொகுத்து வழங்குவார்கள்.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை ஜனவரி 19-ஆம் தேதி இரவு தலைநகரில் தொடங்கிய வெள்ளி இரத ஊர்வல நிலவரங்களையும், தகவல்களையும் மின்னல் வானொலி நேயர்களுக்கு வழங்கியது.

நேரடியாக ஆலயங்களின் தைப்பூசக் கொண்டாட்டங்களைக் காண முடியாதவர்கள், தொலைக்காட்சிகளின் வழி பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் போன்ற பக்தர்கள் தைப்பூச நேரடி வர்ணனையை மின்னல் பண்பலை மூலம் கேட்டு பயனுறலாம்.