பெய்ஜிங் – மனித உரிமை மீறல்களில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் ஒன்று சீனா. இந்நாட்டின் மேற்குப் பகுதியின் உட்பகுதியில் உள்ள சின்ஜியாங் வட்டாரத்தில் வாழும் மக்களின் பெரும்பான்மையோர் உய்கூர் என்ற இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்களாவர்.
22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கி ஆகும்.
இந்தப் பகுதியில் குறைந்தது 8 இலட்சம் முஸ்லீம்கள் அல்லது அதிக பட்சமாக 20 இலட்சம் பேர்வரை தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு மறுகல்வி என்ற பெயரில் அவர்களின் கலாச்சார, மத நம்பிக்கைகள் அழிக்கப்படுகின்றன என்றும் அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து சீனாவுக்கு வெளியே வெளிநாடுகளில் வசிக்கும் உய்கூர் இனப் பிரிவினருக்கு பாதுகாப்பும், உதவிகளும் வழங்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 17) உய்கூர் மனித உரிமைக் கொள்கை சட்டம் (Uyghur Human Rights Policy Act) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.