Home நாடு செமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

செமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

881
0
SHARE
Ad
படம்: நன்றி பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியைப் பிரதிநிதித்து செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த வேட்பாளர்களைக் கட்சி அடையாளம் கண்டு விட்டதாகவும், அவர்களின் பெயர் பட்டியல் கட்சித் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் சிலாங்கூர் மாநில பெர்சாத்து கட்சித் தலைவர் டத்தோ அப்துல் ராஷிட் அசாரி கூறினார்.

இது குறித்து மேலும் கூறுகையில், பெயர் பட்டியலை தற்போதைக்கு வெளியிட இயலாது எனவும், வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து கட்சி வேட்பாளர் செமினி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டதை சுட்டிக் காட்டிய அவர், இம்முறையும் அக்கட்சிக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் வேளையில், வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கடந்த 11-ஆம் தேதிமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர்பக்தியார் முகமட்  மாரடைப்புக் காரணமாக காலமானதைத் தொடர்ந்துஇத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.