Home நாடு பத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்

பத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்

2701
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தைப்பூசத் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் வீற்றிருக்கும் வெள்ளி இரதம் புறப்படுவதிலிருந்து தொடங்கும் பத்துமலைத் தைப்பூசக் கொண்டாட்டம், தைப்பூசத்திற்கு மறுநாள் மீண்டும் பத்துமலையிலிருந்து புறப்பட்டு அதே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வெள்ளி இரதம் திரும்புவதோடு நிறைவடைகிறது.

நேற்று வெள்ளி இரதம் பத்துமலையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு திரும்பும் வழியெங்கும் பக்தர்கள் கூடி நின்று வழிபாடுகள் நடத்தி, அர்ச்சனைகள் செய்தனர். அதே வேளையில் பல இயக்கங்களும், தனி நபர்களும் இரதம் போகும் வழியெங்கும் தண்ணீர்ப் பந்தல்களும், சிற்றுண்டி மையங்களையும் நிர்மாணித்து பக்தர்களுக்கு உணவுகளையும், பானங்களையும் வழங்கினர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் உடன்வர, இன்று புதன்கிழமை அதிகாலை வெள்ளி இரதம் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

#TamilSchoolmychoice

வெள்ளி இரதம் ஜாலான் ஈப்போ மூன்றாவது மைல் வளாகத்தை வந்தடைந்தபோது எடுக்கப்பட்ட படத்தை மேலே காணலாம்.