Home நாடு குறைகள் இருப்பின் பதவி விலக தயார்!- அசார் அசிசான்

குறைகள் இருப்பின் பதவி விலக தயார்!- அசார் அசிசான்

1475
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமது செயல்திறன் மீது மலேசியர்கள்முரணாக ஏதேனும் கண்டறிந்தால், தேர்தல் ஆணையத் தலைவர் பதவிலிருந்து தாம் விலகுவதற்குத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார்.

நாளை (சனிக்கிழமை) நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் ஒரு சில வாக்குச் சாவடிகள் முன்கூட்டியே மூட இருப்பதை குறித்த எதிர்க்கட்சியினர் கேள்விகள் எழுப்பியதற்காக அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தலிலும், ஒரு சில வாக்குச் சாவடிகள், தூரம் கருதி முன் கூட்டியே மூடப்பட்டன என அவர் கூறினார். அப்போது, எழாத குழப்பங்கள் ஏன் இப்போது மட்டும் எழ வேண்டி உள்ளது என அசார் கேள்விகள் எழுப்பினார்.

முன் கூட்டியே மூடப்பட இருக்கும் வாக்குச் சாவடிகள், வாக்குகளைக் கணக்கிடும் நிலையத்திலிருந்து தொலைவில் இருப்பதால், இந்த நடைமுறை முன்பிருந்தே கடைபிடித்து வரப்படுகிறது என அசார் விளக்கினார்.