Home நாடு இடைநிலைப் பள்ளி வரையிலும் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் மீது சட்டம் பாயும்!

இடைநிலைப் பள்ளி வரையிலும் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் மீது சட்டம் பாயும்!

653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயமாக இடைநிலைக் கல்வி வரையிலும் பள்ளிக்கு அனுப்ப, 1996-ஆம் கல்விச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் லீ லாம் தாய் கேட்டுக் கொண்டார்.

கல்வி அடிப்படையில் மாணவர்கள் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கு இச்சட்டமுறை உதவும் என அவர் கூறினார்.

எனினும், கல்வி அமைச்சு இச்சட்டத்தினை அமலுக்குக் கொண்டு வரும் முன், குறைந்த வருவாய் ஈட்டும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும், இவ்விவகாரம் குறித்து, கல்வி அமைச்சு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக, பெற்றோர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் பெற்றோர்களுக்கு 5,000 ரிங்கிட் அபராதமும், ஆறு மாதக் கால சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என அவர் கூறினார்.

இதற்கு முன்னர், துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங், இடைநிலைக் கல்வி வரையிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு எதிராக சட்டத்தை உருவாக்க இருப்பதாகக் கூறியிருந்ததற்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.