கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, தங்களின் முதல் வீட்டை வாங்க கடன் பெற உதவும் பொருட்டில் தேசிய வங்கி, 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக மாதம் 2,300 ரிங்கிட்டுக்கும் கீழ்பட்டு வருமானம் பெறுபவர்கள் 150,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வீடுகளை வாங்குவதற்கு 3.5 விழுக்காடு என்ற விகிதத்துடன் கடன்கள் வழங்கப்படும் என அவர் கூறினார்.
இந்தக் கடன் உதவிகளை அம்பேங்க், பிஎஸ்என், சிஐஎம்பி, மேபேங்க் மற்றும் ஆர்எச்பி ஆகிய வங்கிகள் மூலமாகப் பெறலாம்.
“இந்த நிதி திட்டத்திற்குப் பிறகு, மாநில அல்லது மத்திய அரசுகளால் கட்டப்பட்ட மலிவு விலை வீடுகள் விற்பனை செய்ய இயலாமல் போகும் பிரச்சனைகளை குறைக்கலாம். முதன் முதலாக வீடுகள் வாங்குவோருக்கு போதுமான கடன் உதவிகள் கிடைக்காததால், அவர்கள் வீடுகளை வாங்க இயலாமல் போனது” என லிம் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியின் வாயிலாக இவ்வாறான சூழலை சிறிது சமாளிக்கலாம் என தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்.