Home நாடு செமினி: போட்டியிடுவதா இல்லையா – வார இறுதியில் முடிவு!

செமினி: போட்டியிடுவதா இல்லையா – வார இறுதியில் முடிவு!

794
0
SHARE
Ad

செமினி: வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில், மலேசிய சோசியலிஸ் கட்சி (PSM) களம் இறங்குமா இல்லையா என்பதை இவ்வார இறுதியில் நடக்க இருக்கும் கட்சி சந்திப்பில் முடிவு செய்யப்படும் என, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வன் மலேசியா கினி இணையத்தளச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மேலும், கூறிய அவர், “செமினி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆயினும், இது குறித்து மத்திய செயற்குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது” என்றார்.

இந்த இடைத் தேர்தலில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பேசுவதற்கான களமாக பார்ப்பதாகவும், இதுவரையிலும் அத்தொகுதியில் உள்ள மக்கள் இன்னும் தங்களைச் சந்தித்து அறிவுரைகளையும், உதவிகளையும் பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர் வேட்பாளராக நியமிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, “வேறு யாராவது கூட தேர்தலில் போட்டியிடலாம்” எனக் கூறினார்.