Home இந்தியா அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறக் கூடாது – கமல்

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறக் கூடாது – கமல்

823
0
SHARE
Ad

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைப் பள்ளிக்குச் செல்லக் கூறியும் நேற்று (செவ்வாய்க்கிழமை)அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.

பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டியும், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாத வரை அவர்கள் பணிக்கு திரும்பப்போவதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, “கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமைபேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடரட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும்.  எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்