Home நாடு மேலும் 11 எஇஎஸ் கண்காணிப்பு கேமராக்கள் நெடுஞ்சாலையில் பொருத்தப்படும்!

மேலும் 11 எஇஎஸ் கண்காணிப்பு கேமராக்கள் நெடுஞ்சாலையில் பொருத்தப்படும்!

788
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெருநாள் காலங்களில் நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளைக் குறைக்கும் வகையில், மேலும் 11 எஇஎஸ் கேமராக்களை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பொருத்த இருப்பதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சுக்கு தனது முழு ஆதரவையும் தருவதாக மிரோஸ் (MIROS) அமைப்பின் தலைவர் டான்ஶ்ரீ லீ லாம் தாய் கூறினார்.

சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைவது வாகன ஓட்டுனர்களில் அதிகப்படியான வேகம்தான் என லீ தெரிவித்தார். இந்த கேமராக்களைப் பொறுத்துவது மூலம் ஓட்டுனர்கள் பெரும்பாலான பகுதிகளில் வேகத்திற்குக் கட்டுப்பட்டே வாகனத்தைச் செலுத்துவர். இதன் வாயிலாக விபத்துகளைக் குறைக்கலம் என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாடெங்கிலும் தற்போது 45 எஇஎஸ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.