Home நாடு 7 முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து உச்ச கூட்டத்தில் பேசப்படும்- குவான் எங்

7 முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து உச்ச கூட்டத்தில் பேசப்படும்- குவான் எங்

1026
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்சாத்து கட்சியில் இணைந்த ஏழு முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்து, நம்பிக்கைக் கூட்டணி உச்சக் கூட்டத்தில் பேசப்படும் என நிதி அமைச்சரும், ஜசெக கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேச வேண்டி உள்ளதாக, தாம் பிரதமர் மகாதீர் முகமட்டிடம் தெரிவித்து விட்டதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் வழங்கி விட்டதாகவும் லிம் தெரிவித்தார்.

இதற்கிடையே, நேற்று பெர்சாத்து கட்சியில் இணைந்த ஏழு முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் நேர்மையை பல்வேறு தரப்பினர், குறிப்பாக ஜசெக கட்சியினர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.