Home நாடு சாகிர் நாயக் உரைக்கு பினாங்கு மாநகர மன்றம் அனுமதி மறுப்பு

சாகிர் நாயக் உரைக்கு பினாங்கு மாநகர மன்றம் அனுமதி மறுப்பு

809
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் உரை நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சி ஒன்றை நகரின் அரங்கில் நடத்துவதற்கு பினாங்கு தீவுக்கான மாநகர மன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை இஸ்லாமிய அனைத்துலக பிரச்சார சங்கம் (Islamic Propagation Society International (IPSI) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

எதிர்வரும் ஜூன் 14-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 13 தேதியிட்ட கடிதத்தின் வழி சாகிர் நாயக்கின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதாக பினாங்கு நகர மன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் சாகிர் நாயக் மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்று தங்கியிருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த இந்திய அரசாங்கம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் அவர் தொடர்ந்து மலேசியாவில் மதப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். மலேசிய சட்டங்களை அவர் மீறாத வரையில் அவர் இங்கு மதப் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கு அவருக்குத் தடையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.