Home நாடு 80,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டு அறிவிப்பை திரும்பப் பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர்!

80,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டு அறிவிப்பை திரும்பப் பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர்!

676
0
SHARE
Ad

செமினி: சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் முகமட்டின் கெடாபி, டேவான் ஹாஜி முகமட் சிலின் பல்நோக்கு மண்டபத்திற்காக 80,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பை நேற்று (புதன்கிழமை) மாலை, அவர் அம்மண்டபத்திற்கு வருகைப் புரிந்திருந்த போது அறிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் சட்டத்தை மீறும் எண்ணத்தில் அந்த அறிவிப்பு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான அறிவிப்புகள், இடைத் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் செய்யப்பட்டது தவறு எனவும், தேர்தல் ஆணைத்தின் சட்டத்திற்கு எதிரானது எனவும் அவர் கூறினார். மேலும்,  அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று மாலை டேவான் ஹாஜி முகமட் சிலின் பல்நோக்கு மண்டபத்திற்கு வருகை தந்திருந்த போது, அவர் 80,000 ரிங்கிட் நிதியை அந்த மண்டபத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தார்.