Home நாடு ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக நிலைநிறுத்தம்!

ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக நிலைநிறுத்தம்!

889
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரோன் 95 பெட்ரொல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக அரசு நிலை நிறுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், உச்சவரம்பு விலையாக 2.08 ரிங்கிட்டை அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ரோன் 95 பெட்ரோல் விலையில் ஏற்றங்கள் கண்டாலும், இனி அதன் விலை 2.08 ரிங்கிட்டை கடந்து செல்லாது என அவர் தெரிவித்தார். சந்தைவிலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருந்தால், பெட்ரோலின் வாராந்திர விலையில் மாற்றம் ஏற்படும் என அவர் தெளிவுப் படுத்தினார்.

கடந்த வாரங்களில் ரோன் 95 பெட்ரோல் விலையில் ஏற்பட்ட ஏற்றமும், இறக்கமும் மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்கள் தங்களின் அதிருப்திகளை சமூக ஊடகங்களில் பரவலாக கேள்விகள் எழுப்பி விவாதித்து வந்தனர்.

#TamilSchoolmychoice

மக்களின் அன்றாட செலவினங்களை குறைக்க நம்பிக்கைக் கூட்டணி வெளியிட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்ட அமைச்சர், இனி அதனை செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.