Home நாடு செமினி: பிற்பகல் 2.00 மணிவரை 56 விழுக்காடு வாக்களிப்பு!

செமினி: பிற்பகல் 2.00 மணிவரை 56 விழுக்காடு வாக்களிப்பு!

719
0
SHARE
Ad

செமினி: இன்று சனிக்கிழமை, நடைபெறும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிப்பு காலை 8.00 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 24 வாக்குப் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பிற்பகல் 2.00 மணி வரையிலும் மொத்த வாக்காளர்களில் 56 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இம்முறை 70 விழுக்காடு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்துவர் என தேர்தல் ஆணையம் எதிர்பார்ப்பதாகக் கூறியது.

இதனிடையே, தேர்தல் சட்டத்தை மீறும் ஓரிரு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்திக்கு புகார் வந்துள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். அதனைக் கருத்தில் கொண்டு, பணியில் இருக்கும் அதிகாரிகள் உடனே அம்மாதிரியான நடவடிக்கைகளை நிறுத்த, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.   

#TamilSchoolmychoice

செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் கண்காணிப்பை நடத்தி வரும் பெர்சே அமைப்பு, தேர்தல் விதிமுறைகளை மீறியக் காரணங்களுக்காக நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிஎஸ்எம் கட்சிகள் மீது நான்கு புகார்களை காவல் துறையில் பதிந்துள்ளதாகத் தெரிவித்தது.

4 முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் செமினியில் நேற்று  நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவடைந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு இன்றிரவு 10.00 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.