Home நாடு செமினியில் நம்பிக்கைக் கூட்டணிக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் – தேசிய முன்னணி வெற்றி

செமினியில் நம்பிக்கைக் கூட்டணிக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் – தேசிய முன்னணி வெற்றி

800
0
SHARE
Ad

செமினி – மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செமினி சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று நம்பிக்கைக் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளது.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் தேசிய முன்னணியின் 58 வயது சக்காரியா ஹனாபி 19,780 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நம்பிக்கைக் கூட்டணியின் 30 வயதான வேட்பாளர் முகமட் அய்மான் 17,866 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

1,914 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணியின் சக்காரியா பெற்றிருக்கும் இந்த வெற்றி தேசிய முன்னணிக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டியிருக்கும் முக்கியத் தேர்தல் வெற்றியாகும்.

சுயேச்சை வேட்பாளர் 725 வாக்குகளும், பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் 847 வாக்குகளும் பெற்றனர்.

கேமரன் மலை வெற்றியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மற்றொரு தேர்தல் வெற்றியை தேசிய முன்னணி பதிவு செய்திருக்கிறது.

கேமரன் மலை வெற்றி என்பது தற்காலிகமானதோ, எதிர்பாராமல் கிடைத்ததோ அல்ல என்றும் தேசிய முன்னணி பக்கம் வீசிக்கொண்டிருக்கும் ஆதரவு அலையின் காரணமாகத்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த இடைத் தேர்தலில் 73.3 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என மலேசியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த நிலையில் அதைவிடக் கூடுதலான வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.