Home நாடு மஇகா, மசீச புதிய கூட்டணியை தேடுகின்றன, தேமுவிலிருந்து விலகல்!

மஇகா, மசீச புதிய கூட்டணியை தேடுகின்றன, தேமுவிலிருந்து விலகல்!

878
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளான மஇகா மற்றும் மசீச அக்கூட்டணியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளன. மேலும், பல்லின மக்களின் ஒற்றுமை மற்றும் வேறுபாடுகளற்ற கூட்டணியை நாடவிருப்பதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக அவ்விரு கட்சிகளும் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளன.

தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அஜிஸின் இனவாதப் பேச்சுகளுக்கு இதுவரையிலும் அம்னோ தரப்பிலிருந்து எவ்வித கருத்துகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படாததன் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மஇகா கட்சியின் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் மற்றும் மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில் மேல் கூறப்பட்டக் காரணங்களால் வேறுவழி இல்லாமல் அவ்விரு கட்சிகளும் தேசிய முன்னணியிலிருந்து வெளியாகுவதாகக் குறிப்பிட்டுள்ளன.