Home கலை உலகம் அஜித், வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா 2

அஜித், வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா 2

1156
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் மங்காத்தா. இத்திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாடல்களும் பெறிய அளவில் வரவேற்பைப் பெற்றன.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுப்பதற்காக இரசிகர்கள் வற்புறுத்தி வந்ததாகவும், அது குறித்து தாம் அஜித்தை சந்தித்துப் பேச இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்பாராத வண்ணமாக வெங்கட் பிரபு, மற்றும் அஜித்தின் சந்திப்பு நடந்துள்ளது. மங்காத்தா 2 படத்தினை எடுப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலை கூடிய விரைவில் வெங்கட் பிரபு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.