Home உலகம் கிரிஸ்ட்சர்ச்: காயமடைந்த 3 மலேசியர்களுக்கு தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்!

கிரிஸ்ட்சர்ச்: காயமடைந்த 3 மலேசியர்களுக்கு தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்!

797
0
SHARE
Ad

கிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச்சிலுள்ள இரு வெவ்வேறு பள்ளிவாசல்களில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மூன்று மலேசியர்களுக்கு தரமிக்க சிகிச்சை அளிக்கப்படுவதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்யும் என சைபுடின் அப்துல்லா கூறினார்.

நேற்று நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டிரான்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஆடவன் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டான். அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இதர குற்றச்சாட்டுகள் விரைவில் பிரெண்டன் மீது பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, காயமடைந்த மலேசியர்களின் குடும்பத்தாரின் நலனை மலேசிய அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் எனவும் சைபுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980-களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளார்.