Home இந்தியா ஜாகிரின் உதவியாளர் மும்பையில் கைது, பண மோசடி, தீவிரவாதத்துடன் தொடர்பு!

ஜாகிரின் உதவியாளர் மும்பையில் கைது, பண மோசடி, தீவிரவாதத்துடன் தொடர்பு!

981
0
SHARE
Ad

புது டில்லி:  ஜாகிர் நாயக்கின் முக்கிய நம்பகமான உதவியாளரை நேற்று வெள்ளிக்கிழமை மும்பாய் அமலாக்கப் பிரிவு கைது செய்தது. அப்துல் காதிர் நஜ்முடின் சதாக், எனப்படும் நகை வியாபாரி பண மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் அளவிற்கு, ஜாகிர் பேசிய காணொளிகளை பதிவுச் செய்து அவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்தக் குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலமாக தீவிரவாதத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அமைவதாக அப்பிரிவு தெரிவித்தது. இந்த புதிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு விரைவில் பதிவு செய்யப்படும் என அது தெரிவித்தது.

சதாக் நேரடியாக 50 கோடி ரூபாய் நிதியை சட்டவிரோதமாக, ஜாகிருக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

#TamilSchoolmychoice

கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே, ஜாகிரை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கண்காணித்து வந்தது. வங்காளதேசத்தில் உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டுள்ளவர்களில் ஜாகிரும் ஒருவர் என குறிப்பிடப்படுகிறது. அந்த சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்காக இந்திய அரசு ஜாகிரை ஒப்படைக்குமாறு மலேசிய அரசை வலியுறுத்தி வந்தாலும், ஜாகிருக்கு மலேசியாவில் குடியுரிமை வழங்கப்பட்டு இருப்பதை இந்தியா அமலாக்கப் பிரிவு சுட்டிக் காட்டி உள்ளது.