Home உலகம் வடகொரியா மீதான புதிய தடைகளை விலக்கிய டிரம்ப்!

வடகொரியா மீதான புதிய தடைகளை விலக்கிய டிரம்ப்!

816
0
SHARE
Ad

வாஷிங்டன்: வடகொரியா மீது அமெரிக்கா விதித்திருந்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தச் செய்தியை, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் பெரிய அளவிலான தடைகள் இனி விலக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளை மாளிகை பத்திரிக்கைச் செயலாளர் சாரா சண்டேர்ஸ் கூறுகையில், அதிபர் டிரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம்முக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது எனும் அடிப்படையில், இந்த தடைகள் தேவையற்ற எனக் கருதி அவர் விலக்கியதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆயினும், வடகொரியாவை அனு ஆயுத விவகாரங்களில் கட்டிப் போடுவதற்காகவே இந்த தடைகளை டிரம்ப் அகற்றி உள்ளார் என செய்தித் தளங்கள் குறிப்பிடுகின்றன.