இந்தியா சார்பில் நிலாவுக்கு அனுப்பப்பட இருக்கும் இரண்டாவது விண்கலமாக இது அமைகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த விண்கலம், அனுப்பப்பட இருக்கும் நிலையில், அதனுடன் நாசாவின் ஒரு பிரோபையும் (Probe) கொண்டு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருவியின் மூலம் நிலாவின் தூரத்தை துல்லியமாக அளக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து நாசாவின் சைன்ஸ் மிஷன் (Science Mission) இயக்குனர் லோரி கிளேஸ் கூறியதாவது, ‘எங்களால் முடிந்தவரையிலும் நிலாவின் பரப்பளவை லேசர் ரிப்ளெக்டர் கொண்டு நிறப்ப முடிவு செய்துள்ளோம்‘ எனக் கூறியுள்ளார்.
ரெட்ரோ ரிப்ளெக்டர் எனப்படுவது அதிநவீன கண்ணாடி எனக் கூறப்படுகிறது. பூமியிலிருந்து அறிவியலாளர்கள், லேசரை செலுத்தி, கண்ணாடியின் பிரதிபலிப்பை அளப்பர். இதன் மூலம் நிலா மற்றும் பூமிக்கு இடையிலான துல்லியமான தூரத்தை அளவிட முடியும் எனக் கூறப்படுகிறது.