Home நாடு பாதுகாப்பு துறைகளில் மலேசியா வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது!

பாதுகாப்பு துறைகளில் மலேசியா வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது!

763
0
SHARE
Ad

லங்காவி: கடந்த 1991-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா), பாதுகாப்பு துறையில் மலேசியா அடைந்துள்ள வேகமான வளர்ச்சியை உலக நாடுகளுக்கு பறைசாற்றுகிறது என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற சனிக்கிழமை வரையிலும் நடைப்பெற இருக்கும், லிமா’19 கண்காட்சியின் வாயிலாக, கடல்சார் மற்றும் வான்வெளி நடவடிக்கைகளில், மலேசியா ஆசிய பசிபிக் பகுதியில் பிரபலமாகி உள்ளதை உறுதிபடுத்துகிறது  என பிரதமர் கூறினார்.

லிமா’19 கண்காட்சியில், 32 நாடுகளிலிருந்து, சுமார் 406 தற்காப்பு சம்பந்தமான நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. அவற்றில் 206 உள்ளூர் நிறுவனங்களும், 200 அனைத்துலக நிறுவனங்களும் அடங்கும்.