Home நாடு மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகளில் பற்று அட்டைகள் அறிமுகம்!

மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகளில் பற்று அட்டைகள் அறிமுகம்!

1822
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணமில்லா அமைப்பை ஏற்படுத்த கல்வி அமைச்சு திட்டம் தீட்டி வருவதாக, அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியுள்ளார்.

தற்போது, புக்கிட் லஞ்ஜான் தேசியப் பள்ளி இந்த நடைமுறையை செயல்படுத்தி வருவதாகவும், இந்தத் திட்டம் நாடு தழுவிய அளவில் எல்லா பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல தாம் விருப்பம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அந்த நோக்கத்திற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், பேங் சிம்பானான் நேஷனல் (பிஎஸ்என்) வங்கியுடன் இணைந்து இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பள்ளிகளில் உணவுகள் அல்லது புத்தகங்களை வாங்குவது போன்ற எல்லா வகையான கட்டணங்களும், வங்கி அல்லது பள்ளி அறிமுகப்படுத்திய பற்று அட்டையின் மூலமே செயல்படுத்தப்படும் என அவர் தெளிவுப் படுத்தினார். இம்மாதிரியான செயல் திட்டங்களினால், மாணவர்கள் தங்களின் பணம் திருட்டுப் போவதையும், காணாமல் போவதையும் தவிர்க்கலாம் என அமைச்சர் கூறினார்.