இதைத் தொடர்ந்து எந்தவித வரைத் திட்டமும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சூழலும் – அதைத் தொடர்ந்த குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
3 வருடங்களாக நீடித்து வரும் பிரெக்சிட் விவகாரம் தற்போது மேலும் ஒரு குழப்பமான – எந்தத் திசையில் செல்வது என்ற இலக்கு இல்லாத – நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நேற்று கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் 585 பக்க பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை 344-286 என்ற பெரும்பான்மையில் வாக்கெடுப்பில் மீண்டும் தோற்கடித்தது.
நாடாளுமன்ற முடிவைத் தொடர்ந்து உடனடியாகக் கூடிய ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏப்ரல் 10-ஆம் தேதி ஒன்று கூடி பிரிட்டனின் வெளியேற்றம் குறித்து முடிவெடுப்பர் என அறிவிக்கப்பட்டது.