Home கலை உலகம் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ – மலேசியாவில் தடையா?

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ – மலேசியாவில் தடையா?

1499
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழகம் மற்றும் உலக அளவில் நேற்று வெள்ளிக்கிழமை, நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பல் டீலக்ஸ்’ என இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக தமிழகத்தில் தமிழ்ப்படங்கள் வெளியிடப்படும் அன்றே மலேசியாவிலும் திரையேறுவது வழக்கம். ஆனால், நேற்று ‘ஐரா’ மட்டுமே மலேசியத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சூப்பர் டீலக்ஸ் எந்தத் திரையரங்கிலும் திரையிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் குறித்த அந்தப் படம் மலேசியாவில் தடை செய்யப்படலாம் அல்லது கடுமையான தணிக்கைகளுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

நேற்று தமிழகத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் சாதகமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. நகைச்சுவை கலந்த படமாக இருப்பதால் இரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது என தமிழக திரைப்பட விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.