புது டில்லி: இந்தியாவில் தேர்தலை ஒட்டி பிரச்சாரங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் சம்பந்தமான போலியான தகவல்கள் மற்றும் பதிவுகளைப் பதிவிடும் முகநூல் பக்கங்களுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆயினும், அதிகாரப்பூர்வம் இல்லாத காரணத்தால்தான் அப்பக்கங்கள் நீக்கப்பட்டன என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் தொடர்பான 687 பேஸ்புக் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த நீக்கத்திற்குப் பிறகு காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரையிலும் எந்த ஒரு பதிலும் வரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலியான கணக்குகளைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்பி, அதுவும் இம்மாதிரியான தேர்தல் மற்றவர்களுக்கு இடையூறு அளிப்பதை பேஸ்புக் நிறுவனம் விரும்பவில்லை எனக் கூறியுள்ளது.