Home நாடு ரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி!

ரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி!

789
0
SHARE
Ad

ரந்தாவ்: வருகிற இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதியாக களம் இறக்கியது, அக்கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே, இதற்கான எதிர்ப்பு அக்கூட்டணிக்குள்ளிருந்து எழுந்ததை அனைவரும் அறிந்ததே என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசு ஒரு சில முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டக் காரணத்தினால் மக்கள், அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்து, சமூக ஊடகங்களில் கருத்துரைத்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், அவ்வப்போது, தாங்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிவிட்டு, பின்பு, அதனை மீட்டுக் கொள்ளும் வழக்கமும் நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்களிடம் அதிகம் காணப்படுகிறது என அவர் கூறினார்.

கடந்த இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றதைப் போலவே ரந்தாவிலும், அதன் வெற்றித் தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.