Home நாடு சண்டாக்கானில் பாஸ் போட்டியிடலாம்!

சண்டாக்கானில் பாஸ் போட்டியிடலாம்!

1149
0
SHARE
Ad

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்டீபன் வோங் தியேன் பாட் மறைவிற்குப் பின்னர், அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இடைத் தேர்தல் குறித்த விவரங்களை கூடிய விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்தது.

இதனிடையே, வருகிற சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் சபா மாநில பாஸ் கட்சி தேர்தலில்போட்டியிடதனது வேட்பாளரைநிறுத்தப் போவதாகக் கூறி உள்ளது.

#TamilSchoolmychoice

சபா மாநில பாஸ் கட்சியின் தலைவர் முகமட் அமினுடின் அலிங் இது குறித்து நேற்று கோத்தா கினபாலுவில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆயினும், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு, மற்ற கட்சிகளுடன் கலந்துரையாடியப் பிறகே அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பாஸ் போட்டியிடுவதற்கான தருணமாக இது அமைந்துள்ளதாக அவர் கூறினார்.