Home 13வது பொதுத் தேர்தல் ஜோகூர் தெப்ராவ் நாடாளுமன்றத்திற்கு பிகேஆர் வேட்பாளர்: ஸ்டீவன் சூங் – அன்வார் அறிவிப்பு

ஜோகூர் தெப்ராவ் நாடாளுமன்றத்திற்கு பிகேஆர் வேட்பாளர்: ஸ்டீவன் சூங் – அன்வார் அறிவிப்பு

609
0
SHARE
Ad

Steven-Choong-PKR-Tebrau-Sliderஜோகூர் பாரு, ஏப்ரல் 3 – வரிசையாக வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து வரும் மக்கள் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்த வரிசையில் ஜோகூரிலுள்ள தெப்ராவ் தொகுதியின் வேட்பாளராக ஸ்டீவன் சூங்கை அறிவித்துள்ளார்.

ஸ்டீவன் சூங் பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்பதுடன் ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங்கிற்கு நெருக்கமான ஆதரவாளரும் ஆவார்.

நேற்று ஜோகூர்பாருவில் உள்ள கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூட்டணி தலைவர்களோடு கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த முறை 90,601 வாக்காளர்களைக் கொண்ட தெப்ராவ், தொகுதியில்  47 சதவீத மலாய்க்கார வாக்காளர்களும் 38 சதவீத சீன வாக்காளர்களும், 13 சதவீத இந்திய வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த தொகுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற 13 சதவீத வாக்காளர்களாக இந்தியர்கள் திகழ்கின்றனர்.

ஜோகூர் பாரு நகரை அடுத்து வடக்கிலுள்ள பக்கத்து தொகுதி தெப்ராவ் ஆகும்.

2008 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மசீச வேட்பாளர் லிங் பான் சான் 14,658 வாக்குகள் பெரும்பான்மையில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.