Home இந்தியா நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

1338
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் பரப்புரை தொலைக்காட்சி ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் ஒரு சேரக் கவர்ந்துள்ளது. தெருவில் அமர்ந்து செருப்புகளையும் காலணிகளையும் சுத்தம் (பாலிஷ்) செய்வது, சாலைகளில் குப்பைகளைக் கூட்டிப் பெருக்குவது, தேநீர்க் கடைகளில் நுழைந்து மக்களுக்கு தேநீர் ஆற்றித் தருவது போன்ற வித்தியாச பரப்புரை நடவடிக்கைகளால் மக்களைக்  கவர்ந்து வந்தார் மன்சூர் அலிகான்.

எனினும் நேற்று பரப்புரையின் போது அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து நிலக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.