Home நாடு சிப்பாங்: பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!

சிப்பாங்: பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!

1637
0
SHARE
Ad

சிப்பாங்: நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை சிப்பாங் விமான நிலையம் அருகே நடந்த பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் 11 பேர் உயிர் இழந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

பேருந்து ஓட்டுனரும் எட்டு வெளிநாட்டவர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர் இழந்ததாகவும், மேலும், இருவர் மருத்துவமணையில் இறந்ததாகவும் கெஎல்ஐஏ மாவட்ட காவல் துறைத் தலைவர் சுல்கிப்ளி அடாம்ஷா தெரிவித்தார்.

முதல் கட்ட விசாரணையில், அப்பேருந்தில் மொத்தம் 43 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீலாயிலிருந்து பணியிடத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

காயம் அடைந்த இதர பயணிகள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பவத்திற்கான காரணத்தை காவல் துறை விசாரித்து வருவதாகவும் சுல்கிப்ளி கூறினார்.