Home நாடு ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்புக்கு தேர்தல் ஆணையம் தயார்!

ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்புக்கு தேர்தல் ஆணையம் தயார்!

1171
0
SHARE
Ad

சிரம்பான்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் வேளையில், 110 பேர் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு வாக்கு மையங்களில் இந்த வாக்களிப்பு நடைபெறும்.

நாளை வாக்களிப்பவர்களில் 74 பேர் இராணுவர்கள். மேலும், 36 பேர் காவல் அதிகாரிகள் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.

காலை 8 மணி தொடங்கி மதியம் 12 மணி வரையிலும் வாக்கு மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வாக்களிப்பு முடிந்த பின்பு, அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல் நிலையத்தில் வைக்கப்படும் எனவும், வருகிற வாக்களிப்பு தினத்தன்று (சனிக்கிழமை) அவை கணக்கிடப்படும் எனவும் அசார் தெரிவித்தார்.