Home இந்தியா சுந்தர் பிச்சை வாக்களிக்க வரவில்லை, புகைப்படம் வதந்தியே!

சுந்தர் பிச்சை வாக்களிக்க வரவில்லை, புகைப்படம் வதந்தியே!

1082
0
SHARE
Ad

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த இந்தியாவின் இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரியைத் தவிர்த்து மேலும் பத்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றன.  இதற்கிடையே, மக்களவை தேர்தலில் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை வாக்களித்தார் என புகைப்படமொன்று பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. இது வெறும் வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது, அதில் வாக்களிப்பதன் அவசியத்தை தெரிவிக்கும் வகையில் வசனங்கள் அமைந்திருந்தன. பலர் அதனை சுந்தர்பிச்சையுடன் தொடர்புப்படுத்தி குறிப்பிட்டு வந்தனர்.

சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்து தேர்தலில் வாக்களித்தார் என்பது போன்ற புகைப்படம் பரவலானது. அவ்வாறு பகிரப்பட்ட அந்தப் புகைப்படம் 2017-இல் சுந்தர் இந்தியாவுக்கு வந்தபோது ஐஐடி காரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது

#TamilSchoolmychoice

தற்போது உலகின் மிக முக்கியமான நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் சுந்தர் பிச்சை உள்ளார். தற்போது அவர் அமெரிக்க குடிமகன் என்பதால் அவரால் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என்பதே உண்மை