Home நாடு தண்ணீர் தடை காரணமாக மாதக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது!

தண்ணீர் தடை காரணமாக மாதக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது!

950
0
SHARE
Ad

ஷா அலாம்: வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரங்களில் ஏற்பட இருக்கும் நீர் விநியோகத் தடைக்கு பயனீட்டாளர்களுக்கு மாதக் கட்டணத்திலிருந்து தள்ளுபடி ஏதும் கொடுக்கப்படாது என சிலாங்கூர் மாநில நீர் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த ஆரம்ப அறிவிப்பு வெளியிடப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு தள்ளுபடியும் வழங்கத் தேவையில்லை என அதன் தலைமை நிருவாக அதிகாரி சுஹாய்மி காமாரால்சாமான் தெரிவித்தார்.

ஏப்ரல் 24-ஆம் தேதி, சுங்கை சிலாங்கூரின் இரண்டாவது கட்ட நீர் சிகிச்சை ஆலையில் மேம்பாட்டுப் பணிகள் நடக்க இருப்பதால் நீர் விநியோகம் தடைப்படும் என அவர் குறிப்பிட்டார். இது குறித்து பொது மக்களுக்கு ஆரம்பக் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் சுமார் 577 இடங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்படும் என நேற்று வியாழக்கிழமை தேசிய நீர் ஆணையம் (ஸ்பான்)  அறிவித்திருந்தது.

இந்த நீர்த் தடையால் சுமார் 4,143,465 மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.