Home உலகம் கொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி! 280 பேர் காயம்!

கொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி! 280 பேர் காயம்!

1106
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள  கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இதுவரையில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் சுமார் 280 காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளினால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் வலிமையுடன் திகழ்ந்த கால கட்டத்தில் இதுபோன்ற பெரிய அளவிலான குண்டுவெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. ஆனால், விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் முறியடித்த பின்னர் நடைபெற்றிருக்கும் பெரிய அளவிலான குண்டுவெடிப்புகள் இன்று நடந்தவையாகும்.