Home உலகம் கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு

கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு

726
0
SHARE
Ad

கொழும்பு – நேற்று கொழும்பு நகரில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது.

காயமடைந்த 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியிருப்பதால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம்.

தாக்குதலுக்கான காரணங்களை இலங்கை அரசாங்கமும் இன்னும் வெளியிடாத நிலையில், எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் குறித்த தகவல்கள் அதிக அளவில் பரிமாறப்படாமல் இருக்க வாட்ஸ்எப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மீது சில கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இந்த சமூக ஊடகங்களின் இணையத் தளங்களைப் பயன்படுத்த முடியவில்லை எனப் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறுகிய இடைவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்ட வேளையில் உள்ளூர் நேரம் காலை 8.45 தொடங்கி 6 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

நெகம்போ, பட்டிகோலா, கொச்சிக்கடை ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்கள், ஷங்ரிலா, கிங்ஸ்பரி, சின்னாமோன் கிராண்ட் தங்கும் விடுதிகள் ஆகியவை முதலில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களாகும்.

இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி தரும் இன்னொரு தகவலாக கொழும்பு விமான நிலயத்தின் அருகில் ஒரு குழாயில் வெடிகுண்டுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவை செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.