Home நாடு சண்டாக்கான்: தேர்தலில் ஜசெக கட்சியின் சின்னம் பயன்படுத்தப்படும்!- ஷாபி அப்டால்

சண்டாக்கான்: தேர்தலில் ஜசெக கட்சியின் சின்னம் பயன்படுத்தப்படும்!- ஷாபி அப்டால்

734
0
SHARE
Ad

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான வாரிசானும், யூபிகெஒவும் ஜசெக கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் என சபா மாநில முதல்வர் ஷாபி அப்டால் கூறினார்.

காலம் சென்ற சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் வோங்கின் இளைய மகளான விவியன் வருகிற மே 11-ஆம் தேதி தேர்தல் களத்தில் குதிக்க உள்ளார். நாளை சனிக்கிழமை சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், ஆளும் கட்சியாக இருந்த போதிலும், இந்த இடைத்தேர்தலை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ஷாபி கூறினார்.

#TamilSchoolmychoice

சபாவின் சுகாதார அமைச்சராக பதவி வகித்த ஸ்டீபன், கடந்த மார்ச் 28-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த பொதுத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட வேளையில், சபா மற்றும் சரவாக்கில் கூட்டணி கட்சிகள் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டன.

கடந்த 14-வது பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரே, நம்பிக்கைக் கூட்டணி முறையாக பதிவுச் செய்யப்பட்டது.